கடையநல்லூரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- கடையநல்லூரில் அரசு உதவி பெறும் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் 96-ம் ஆண்டு 8-ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
- இதில் 25-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் அரசு உதவி பெறும் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் 96-ம் ஆண்டு 8-ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகி செய்யது முகைதீன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் செய்யது மசூது சாகிப், சித்திக், சாகுல்கமீது, சகீர், அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமில் வரவேற்றார். பேச்சியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பள்ளியின் வளர்ச்சியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு குறித்து வரலாற்று ஆசிரியர் இப்ராஹிம், டாக்டர் சஞ்சீவி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமீன், முன்னாள் ஆசிரியர் முகைதீன், அக்பர் அலி, முன்னாள் மாணவர் ஜமால் ஆகியோர் பேசினர். இதில் சுமார் 60 முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 25-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பைசல், உபைதுல்லா, சாகுல், மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் இஸ்மாயில் நன்றி கூறினார்.