உள்ளூர் செய்திகள் (District)

சமூகஆர்வலர் பாலமுருகன்.

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர்

Published On 2022-10-03 09:46 GMT   |   Update On 2022-10-03 09:46 GMT
  • 66 ஆதரவற்ற மற்றும் ஏழைகளின் உடலை அடக்கம் செய்துள்ளார்.
  • காந்தி சிலைக்கு மாலை அணிவித்து வாகனத்தை ஏழைகளின் பயன்பாட்டிற்கு அளித்துள்ளார்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40) எம்.பி.ஏ. பட்டதாரி.

இவர் கடந்த சில வருடங்களாக பல்வேறு சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக ஆதரவற்ற நிலையில் இருந்து இறந்தவர்கள் மற்றும் உடல் அடக்கம் செய்ய வசதி இல்லாத நிலையில் உள்ள ஏழைகளின் உடல்களை நகராட்சி மற்றும் காவல்துறையிடம் அனுமதி பெற்று தனது சொந்த செலவில் வாகனத்தில் ஏற்றி சென்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த உடல்களை அடக்கம் செய்து விடுவார்.

இது போன்று இதுவரை 66 ஆதரவற்ற மற்றும் ஏழைகளின் உடலை அடக்கம் செய்துள்ளார்.

இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஏழைகளின் உடல்களை எடுத்து சென்று அடக்கம் செய்ய தனது சொந்த செலவில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அமரர் ஊர்தி ஒன்றை விலைக்கு வாங்கி அதை ஏழைகளுக்காக இலவசமாக அர்ப்பணித்தார்.

முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இந்த வாகனத்தை ஏழைகளின் பயன்பாட்டிற்கு அளித்துள்ளார்.

இவரின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News