உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே உள்ள கொத்தமங்கலம் பள்ளிக்கு எதிரே மின் கம்பத்தின் ஒயர் தாழ்வாக செல்வதை படத்தில் காணலாம்.

திண்டிவனம் அருகே பள்ளி வளாகத்தில் மின் வயர் அறுந்து விழுந்தது; ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

Published On 2023-04-21 08:11 GMT   |   Update On 2023-04-21 08:11 GMT
  • கொத்தமங்கலம் கிராமத்தில் சுமார்-5௦௦க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
  • மின்துறை ஊழியர்கள் அதைசரிசெய்வதற்கு அரசு பள்ளிக்கு வந்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொந்த மங்கலம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு சாலைகளில் உள்ள மின்கம்பங்களின் வயர்கள் தாழ்வாக செல்கின           இது குறித்து கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதே போலஅரசு பள்ளி வளாகத்தில் தாழ்வான மின்கம்பிகள் செல்வதாகவும் பலமுறை புகார் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மின் வயர் அருந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவ மாணவிகள் உயிர்த்தப்பினர். இதுகுறித்து மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் துறை ஊழியர்கள் அதை சரி செய்வதற்காக அரசு பள்ளிக்கு வந்தனர்.  மின் உயர் கீழே அறுந்து விழுந்ததை கேள்விப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மின் ஊழியர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கொத்தமங்கலத்தில் பல்வேறு தெருகளில் உள்ள மின்கம்பங்களில் வயர்கள் தாழ்வாக உள்ளதை அதை சரி செய்ய வேண்டும் இல்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்  .மேலும் பள்ளி மாணவர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் படிப்பதற்கே எங்களுக்கு பயமாக உள்ளது மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது எனவும், பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பலமுறை நாங்களும் எங்கள் பெற்றோரும் பள்ளி தலைமை ஆசிரியரிடமும், மின்துறை ஊழியர்களிடமும் கூறி இருந்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினா ர்கள். எனவே, இதனை உடனடியாக மின்க ம்ப ங்களை மா ற்ற தேவை யான நடவ டிக்கை களை எடுக்க வே ண்டு மென கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News