காரைக்காலில் கொரோனா பாதித்த முதியவர் பலிபொதுமக்கள் பீதி
- காரைக்காலைச் சேர்ந்த 35 வயதுபெண்கடந்த 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்
- 84 வயது முதியவர் நேற்று கொரோனாவிற்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவிற்கு, காரைக்காலைச் சேர்ந்த 35 வயதுபெண்கடந்த 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், நல்வழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் ஆகியோர் அறிவித்து இருந்தனர். இந்த சூழலில் காரைக்கால் பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த 84 வயது முதியவர் நேற்று கொரோனாவிற்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்று ஏற்பட்டு, தஞ்சாவூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், குணமாகிவிட்டதாக எண்ணி, ஆஸ்பத்திரி யிலிருந்து வீட்டுதனி மையில் இருந்த நிலையில், அந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுவை மாநிலத்திலேயே காரைக்காலில் மட்டும் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றால்2 பேர் உயிரிழந்த தால்காரைக்கால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில், பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டுமென மாவட்ட நலவழித்துறை அறிவுறுத்தியுள்ளது.