உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை எடுத்த பணம் ரூ.10 ஆயிரத்தை நிவாரணமாக வழங்கிய முதியவர்

Published On 2022-07-25 09:40 GMT   |   Update On 2022-07-25 09:40 GMT
  • பள்ளிகளுக்கு குடிநீர் வசதி எழுது பொருட்கள் மேஜை போன்றவற்றை வாங்கித் தந்தேன்.
  • கடந்த 2010-ம் ஆண்டு முதல் பிச்சை எடுத்து வருகிறேன்.

வேலூர்:

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 72). பிச்சை எடுத்து வருபவரான இவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு வந்தார்.

பின்னர் தான் பிச்சை எடுத்து வைத்திருந்த ரூ.10 ஆயிரம் நிதியை அவர் அங்குள்ள வங்கி கிளை மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில் அனுப்பி வைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கி நிவாரணத்தொகையை வழங்கினார்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் பிச்சை எடுத்து வருகிறேன். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பல்வேறு பள்ளிகளுக்கு குடிநீர் வசதி எழுது பொருட்கள் மேஜை போன்றவற்றை வாங்கித் தந்தேன்.

இதுவரை ரூ.50 லட்சத்து 60 ஆயிரம் வரை வழங்கியுள்ளேன். இந்த நிதியை பல்வேறு கலெக்டர்கள் மூலம் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன். தற்போது இலங்கை தமிழர்களுக்காக ரூ.10 ஆயிரம் நிதியை அனுப்பி வைத்துள்ளேன் என்றார்.

Tags:    

Similar News