உள்ளூர் செய்திகள்

அன்புஜோதி ஆசிரம மாற்றுத்திறனாளி கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோட்டம்: போலீசார் வலைவீச்சு

Published On 2023-03-31 05:08 GMT   |   Update On 2023-03-31 05:47 GMT
  • அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 15-பேர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.
  • இவர்கள் 15 பேரும் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் குண்டலிப்புலியூரில் அனுமதி இன்றி இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 15-பேர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து கடந்த பிப்ரவரி 14-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் 15 பேரும் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் மாற்றுத்திறனாளி சுப்பிரமணி அண்ணி மாது (வயது 29) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 16-ந் தேதி கழிவறையின் உள் பகுதியில் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஜன்னல் மற்றும் மரப்பலகைகளை உடைத்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை எங்கு தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணி அண்ணி மாதுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News