உள்ளூர் செய்திகள்
நாகேஸ்வரமுடையார் கோவிலில் அன்னாபிஷேகம்
- 108 கிலோ அரிசியால் அன்னம் மற்றும் பழங்களால் சிவனுக்கு அலங்காரம்.
- மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம்.
சீர்காழி:
சீர்காழியில் பொன்னாக வள்ளி அம்பாள் உடனாகிய நாகேஸ்வர முடையார் (ஆதி ராகு) கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு பவுர்ணமி முன்னிட்டு நாகேஸ்வரமுடையாருக்கு 108 கிலோ அரிசியால் அன்னம் மற்றும் வாழைப்பூ பரங்கிக்காய், திராட்சை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களினால் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.