தூத்துக்குடி போத்தி விநாயகர் கோவிலில் அன்னதானம் - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
- போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகருக்கு வருஷாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- அதனை தொடர்ந்து அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போத்தி விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமி 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.
அன்னதானம்
இந்நிலையில் போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகருக்கு வருஷாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை சாமி தரிசனம் செய்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழாவில் தர்மகர்த்தா ராஜா பெரியசாமி, செயலாளர்கள் செல்வராஜ், செல்வகுமார், பொருளாளர் வேல்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செல்லப்பாண்டி, ரத்தினசாமி, பேச்சிமுத்து, ஜீவானந்தம், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, இளஞ்சூரியன், ராஜ்குமார், முருகேசன், ராம்குமார், சேகர், மணி, கணேஷ், சண்முகசுந்தரம், அசோக் பெரியசாமி, சரவணன், தங்கசந்திரன், சித்திரைசெல்வன், பெரியசாமி, மாணிக்கம், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநில பேச்சாளர் சரத்பாலா, விவசாய அணி தங்கராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜாமணி, முத்துச்செல்வம், செல்வகுமார், ரவீந்திரன், செந்தில்குமார், மற்றும் கருணா, பிரபாகர், மணி, ஜோஸ்பர், லிங்கராஜா, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.