உள்ளூர் செய்திகள்

தமிழ் இலக்கிய மன்ற ஆண்டு விழா நடைபெற்ற போது எடுத்த படம்.


கீழப்பாவூரில் தமிழ் இலக்கிய மன்ற ஆண்டு விழா

Published On 2022-09-07 09:21 GMT   |   Update On 2022-09-07 09:21 GMT
  • பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் தமிழ் இலக்கிய மன்ற 47-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
  • சுகிசிவம் நடுவராக பங்கேற்று வாழ்க்கை என்பது சுகமா? சுமையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் தமிழ் இலக்கிய மன்ற 47-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இலக்கிய மன்ற தலைவர் செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவிற்கு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் துரைராஜ் தலைமை தாங்கினார்.

சிவசுப்பிரமணியன், திருமலைச்சாமி, ராமரத்தினசாமி, கணபதி, மதியழகன்,கிருஷ்ணசாமி, சௌந்தரபாண்டியன், கதிரேசன், சுரேஷ், தங்கேஸ்வரன், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்கசேட் வரவேற்றார்.ராமச்சந்திரபாண்டியன் ஆண்டறிக்கையினை வாசித்தார். செந்தில்செல்வன் தொகுப்புரை ஆற்றினார். பால்துரை, பொன்.அறிவழகன், அருள்செல்வன், திரைப்பட இயக்குனர் பாரதிகண்ணன், சுப்பிரமணியன், பொன்.கணேசன், ராமசாமி, தங்கசாமி உள்ளிட்டோர் பேசினர்.

சுகிசிவம் நடுவராக பங்கேற்று வாழ்க்கை என்பது சுகமா? சுமையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. சுகமே என்ற அணியில் விஜயசுந்தரி, கவிதா ஜவகர், லெட்சுமண பெருமாள் ஆகியோரும், சுமையே என்ற அணியில் மலர்விழி, பர்வீன் சுல்தானா, மோகனசுந்தரம் ஆகியோரும் பேசினர். முடிவில் சின்னமணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News