உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் ஆண்டு விழா

Published On 2023-03-08 10:24 GMT   |   Update On 2023-03-08 10:24 GMT
  • கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
  • தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்ந்த பணிகளில் அமர வேண்டும் என அறவுறித்தினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரியின் விளையாட்டு விழா, ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவை கல்லூரியின் தாளாளர் சி.பெருமாள், கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் அனைவரையும் வரவேற்றார். கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் தொடக்க உரையாற்றி ஆண்டறிக்கை படித்தார். விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தாளாளர் பேசும் போது கிராமப்புற மாணவர்கள் இன்று தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பயன்படுத்தி நன்கு கல்வி கற்று, வளாக தேர்வில் தேர்வாகி வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்றார்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு பேசும் போது ஒழுக்கம், அறம், நற்சிந்தனை, நன்னடத்தை, விளையாட்டு, விவசாயம் அனைத்தும் கல்வி தான். அதிலும் நாம் தேர்ச்சி பெற வேண்டும். இனத்தின் பண்பாடு, கலாசாரத்துடன் இணைந்தது தாய்மொழி. அது நமது உயிர், உணர்வாகும். மாணவ, மாணவிகள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கி போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்ந்த பணிகளில் அமர வேண்டும் என்றார். இதில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பல்கலைக்கழக அளவில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு பரிசுகளை வழங்கினார். மேலும் பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார். இதில் சிறப்பாக பணிபுரிந்த பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், அனைவருக்கும் சான்றிதழ்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News