உள்ளூர் செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு 14 ந் தேதி தொடங்குகிறது

Published On 2023-08-11 09:21 GMT   |   Update On 2023-08-11 09:21 GMT
  • மாநிலத்தில், 109 கலை அறிவியல் கல்லூரிகளில், 24 ஆயிரத்து 341 இடங்கள் முதுநிலை பிரிவில் உள்ளன.
  • கோவை அரசு கலைக்கல்லூரியில் எம்.சி.ஏ., பிரிவு தவிர்த்து, 20 முதுநிலை பிரிவுகளில், 557 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

கோவை,

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளுக்கு, முதலாண்டு மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்களை, இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என, கல்லூரி கல்வி இயக்குனர் கீதா தெரிவித்தார்.

மாநிலத்தில், 109 கலை அறிவியல் கல்லூரிகளில், 24 ஆயிரத்து 341 இடங்கள் முதுநிலை பிரிவில் உள்ளன. மாணவர்கள் விண்ணப்பங்களை www.tngasa.in/ www.tngase.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவை அரசு கலைக்கல்லூரியில் எம்.சி.ஏ., பிரிவு தவிர்த்து, 20 முதுநிலை பிரிவுகளில், 557 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இக்கல்லூரியில் உதவி மையங்கள், 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை, காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குநர் கீதா கூறுகையில், உதவி மையங்கள் செயல்படும் கல்லூரி விபரங்களை, மாணவர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம் என்றார்.

Tags:    

Similar News