நெல்லை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் காா்த்திகேயன் தகவல்
- தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இணையதளம் மூலம் ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம்.
- பட்டாசு கடை நடத்தும் இடம் பாதுகாப்பானதாக இருத்தல் அவசியம்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை மற்றும் பிற பண்டிகைகள், திருவிழா காலங்களில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விரும்புவோா் வெடிபொருள் சட்டம் 2008 விதி 84 - ன் கீழ் உரிய ஆவணங்கள் மூலம் இணையதளம் மூலம் ஆண்டு முழுவதும் விண்ணப் பிக்கலாம். இந்த உரிமமானது வழங்கப் பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் வரை மட்டுமே செல்லத்தக்கதாகும்.
படிவம் ஏ.இ.-5-ல் விண்ணப்பப் படிவம், உரிமக் கட்டணமாக ரூ.500 அரசு கருவூலத்தில் செலுத்திய செல்லான், கடையின் வரைபடம், புகைப்படம் - 2, வீட்டு வரி ரசீது, வாடகை ஒப்பந்தப்பத்திரம், அதன் வீட்டு வரி ரசீது நகல், சொந்தக்கட்டிடம் எனில் வீட்டு வரி ரசீதின் நகல், நெல்லை துணை இயக்குநா் (சுகாதாரப் பணி) தடையின்மை சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பட்டாசு கடை நடத்தும் இடம் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமலும், பாதுகாப்பானதாகவும் இருத்தல் அவசியம்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு உரிமம் பெற்ற நபா்கள் அதே இடத்தில் மீண்டும் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் செய்தால், அதற்கான உரிமத்தையும் விண்ணப் பத்துடன் இணைத்து இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.