உள்ளூர் செய்திகள்

இலவச தையல் எந்திரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்:மாவட்ட கலெக்டர் தகவல்

Published On 2023-05-16 07:27 GMT   |   Update On 2023-05-16 07:27 GMT
  • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று பெறவேண்டும்.
  • வருகிற 23-ந் தேதிபிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று பெறவேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்க்குள் இருக்க வேண்டும்.

வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பி டச் சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று, ஜாதிச் சான்று, விண்ணப்பதாரரின் வண்ண புகைப்படம் - 2, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், எண்.30சி வ.உ.சி. நகர், 5-வது தெரு, கச்சிராப்பாளையம் ரோடு, கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் வருகிற 23-ந் தேதிபிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News