என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- கட்டுரைப்போட்டி, கடந்த மாதம் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் என இரு பிரிவுகளில் நடை பெற்றது.
- கலெக்டர் குலோத்துங்கன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி:
காரைக்காலில் கடந்த மாதம் நடைபெற்ற தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவர் களுக்கு, கலெக்டர் குலோத்துங்கன் பரிசளித்து பாராட்டினார். காரைக்கால் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் 21-ந் தேதி வரை தீயணைப்பு தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கான தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டி, கடந்த மாதம் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் என இரு பிரிவுகளில் நடை பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். போட்டி யில் வெற்றி பெற்ற 4 மாணவ, மாணவிகளுக்கு, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, கலெக்டர் குலோத்துங்கன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் திருநள்ளாறு பிரிவில் முதல் பரிசு பெற்ற சேத்தூர் அரசு பள்ளியைச் சேர்ந்த கிரிஷ் என்ற மாணவனுக்கு ரூ.900, 2-ம் பரிசு பெற்ற சக்தி என்ற மாணவனுக்கு ரூ.600 வழங்கப்பட்டது. மேலும் காரைக்கால் பிரிவில் கோவில்பத்து அரசு பள்ளியைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் என்ப வருக்கு ரூ.900, ஹரிஷ் ராகவா என்ற மாணவனுக்கு ரூ.600 ரொக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர் பாஸ்கரன், கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி மற்றும் சுரக்குடி தீயணைப்பு அதிகாரி ஹென்றிடேவிட், காரைக்கால் தீயணைப்பு அதிகாரி மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- வெள்ளை மதகு அருகே விளை நிலத்தில் மணல்களை கொட்டி நிரப்புகின்றனர்.
- பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கடலூர்:
காட்டுமன்னா ர்கோவில் ஓமாம்புலியூர் கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான டன் மணல் கனரக வாகனங்கள் மூலம் எடுக்கப்பட்டு வெள்ளை மதகு அருகே விளை நிலத்தில் மணல்களை கொட்டி நிரப்புகின்றனர். இதுமட்டுமல்லாமல் வெளியில் இருந்து வரப்படும் கனரக வாகனங்களுக்கு மணலை விற்பதற்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் தற்பொழுது பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பொது மக்களுக்கு பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த மணல் கொட்டி விற்பனை செய்வதற்கு விளைநிலத்தை வீணடிப்பததையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளும் கோரிக்கை வைக்கின்றனர். கொள்ளிடம் ஆற்றில் இருந்து நேரடியாக மணலை அள்ளுவதற்கு வழிவகை செய்யாவிட்டால் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் நடைபெறும் என அகில இந்தியவிவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.
- பண்ருட்டியில் சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- தனிப்படைபோலீசார் பண்ருட்டி புலவனூர்காலனி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் வம்பாமேடு பகுதியில் விஷச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். பலர் பார்வை இழந்தனர்.இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில் தனிப் படைபோலீசார் பண்ருட்டி புலவனூர்காலனி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்தஅன்பழகன் (60 மதகடிப்பட்டு சென்று 12 சாராய பாக்கெட் வாங்கி கொண்டு வந்து புலவனூர் கர்ம காரிய கொட்டகை அருகில்விற்பனை செய்தது தெரியவந்தது.இதனை த்தொடர்ந்து அவரைகைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பண்ருட்டி-சென்னை சாலையில் ெரயில்வே கேட்டை மூட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கடலூர்:
பண்ருட்டியிலிருந்து சென்னை செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சாலையில் உள்ள ரயில்வே கேட் மற்றும் கேட் லாட்சை நிரந்தரமாக மூடரயில்வே நிர்வாகத்தினர் முடிவு செய்து உள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து இன்று காலை பராமரிப்பு பணியினால் தற்காலிகமாக ரயில்வே நிர்வாகத்தினர் ரயில்வே கேட்டை மூடினார். இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பாதசாரதிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் ரயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
- குளிர்பானம் வாங்குவதற்கு பணம் பெற்றுக் கொண்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
- அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மயங்கி கிடந்தார்.
கடலூர்:
கடலூர் வண்டி குப்பத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 35). கூலி தொழிலாளி. நேற்று ராஜீவ் காந்தி தனது உறவினரிடம் குளிர்பானம் வாங்குவதற்கு பணம் பெற்றுக் கொண்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் மயங்கி கீழே கிடப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மயங்கி கிடந்தார். இதனை தொடர்ந்து ராஜீவ் காந்தியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜீவ் காந்தி இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அனைத்து பகுதிகளிலும் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
மயிலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாராயம் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது மரக்காணம் அருகே விஷ சாராயம் அருந்தி அதிக உயிர்ப்பலி ஏற்பட்டதால், சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாதிராபுலியூர் பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் பாதிராபுலியூர் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக சந்தேகம் படும்படி சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது, அந்த நபர் நிற்காமல், அதிவேகமாக சென்றுள்ளார். போலீசார் அவரை துரத்தி சென்று மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், புதுவை மணலிபட்டு பகுதியை சேர்ந்த அறிவழகன்(வயது 35), என்பதும், புதுவையில் இருந்து 10 லிட்டர் சாராயம் கடத்தி சென்று பாதிராபுலிர் சுடுகாட்டுபாதை அருகே மறைத்து வைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து அறிவழகனை கைது செய்த போலீசார், 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- ஒருவர் அங்கிருந்து இரும்பு சேர் ஒன்றை எடுத்து பஸ் முன் பக்க கண்ணாடியில் அடித்துவிட்டார்.
- கண்ணாடியை உடைத்த நபரை பிடித்து சுங்கச்சாவடியில் பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரம்:
முசிறியில் இருந்து சென்னைக்கு ஒரு அரசு விரைவு பேருந்து பஸ் சென்று கொண்டிருந்தது. டிரைவர் சதீஷ்குமார் பஸ்சை ஓட்டிக் கொண்டிருந்தார். சுரேஷ் குமார் கண்டக்டராக இருந்தார். பஸ் நேற்று இரவு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்று கொண்டிருந்தஒருவர் அங்கிருந்து இரும்பு சேர் ஒன்றை எடுத்து பஸ் முன் பக்க கண்ணாடியில் அடித்துவிட்டார்.
உடனடியாக பஸ் டிரைவர் சுதாகரித்துக் கொண்டு பஸ்சை நிறுத்தினார். பின்னர் டிரைவர், கண்டக்டர் இருவரும் பஸ்லிசிருந்து இறங்கி வந்து கண்ணாடியை உடைத்த நபரை பிடித்து சுங்கச்சாவடியில் பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட னர். அவர் மன நலம் பாதித்தவர் என தெரிய வந்தது. உடனடியாக அவரை விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் ஜீப் பயங்கரமாக மோதியது.
- வில்லியம்ஸ், ரெஜியஸ்ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
விழுப்புரம்:
உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வில்லியம்ஸ் (வயது 30), அந்தோணி ராஜ் (26)ரெமிஜியஸ் ( 22)ஆக 3 பேர் ஜிப்பில் இறையானூரி லிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். விக்கிரவாண்டி அருகே சித்தானி அருகே சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் ஜீப் பயங்கரமாக மோதியது. இதில் அந்தோணி ராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். வில்லிய ம்ஸ், ரெஜியஸ்ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காத்த முத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த வர்களை உடனடியாக முண்டியம் பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்பு லன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் அந்தோணி ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- ஒருவரின் கரும காரிய நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்கள் வாங்கஒரு குடும்பத்தினர் வந்தனர்.
- 8 பெண்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டிஅடுத்த செம்மேடு ஏரிப்பாளையம்கிராமத்தில் இருந்துஆட்டோ இன்று காலை பண்ருட்டி நோக்கி வந்தது.இந்த ஆட்டோவில் உறவினர் ஒருவரின் கரும காரிய நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்கள் வாங்கஒரு குடும்பத்தினர் வந்தனர். இந்த ஆட்டோசேலம் மெயின் ரோடுவளைவில் திரும்பும் போது எதிரே மணப்பாக்கத்தில் இருந்து வந்த மற்றொருஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 ஆட்ேடா டிரை வர்கள் மற்றும் ஆட்டோ வில் வந்த 8 பெண்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றுஅனைவரையும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துஇது குறித்து விசாரணை நடத்தினர்.
- கழிவுநீர் அகற்றுவதற்கான கட்டணமாக ரூ.800 நிர்ணயம் செய்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- ரசீதுடன் விண்ணப்பம் செய்து பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் நகராட்சி கமிஷனர் சுரேந்திர ஷா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-ெசனனை நகராட்சி நிர்வாக இயக்குநர் செயல்முறையின்படி 15-வது மத்திய நிதிக்குழு மான்யம் 2021-22-ல் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சிக்கு 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் வாகனம் வாங்குவதற்கு நிர்வாக அனுமதி பெற்று கழிவுநீர் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தை பொதுமக்களின் உபயோகத்திற்குகொண்டு வருவதற்காக ஒருமுறை கழிவுநீர் அகற்றுவதற்கான கட்டணமாக ரூ.800 நிர்ணயம் செய்து நகர் மன்ற தீர்மான எண்.53, நாள்.11.4.2023-ல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் உபயோகத்திற்கு 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்நகராட்சி கழிவுநீர் வாகனத்தின் மூலம் ஒருமுறை கழிவுநீர் அகற்றுவதற்கு கட்டணமாக ரூ.800 நகராட்சி கருவூலத்தில் செலுத்தி அதற்கான ரசீதுடன் விண்ணப்பம் செய்து பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியின் கழிவுநீரினை நகராட்சி கழிவுநீர் வாகனத்தின் மூலம் அகற்றி பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
- பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- டி.எஸ்.பி. தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் டி.எஸ்.பி. தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த இஸ்மாயில் (வயது54 ) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
- உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறியூட்டப் பட்ட அரிசியை உடனடி யாக நிறுத்த வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை அமைப்பாளர் கஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சையத்கரீம், ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட அமைப்பு குழுவினர்கள் மணி, கே.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறியூட்டப் பட்ட அரிசியை உடனடி யாக நிறுத்த வேண்டும், நீர் நிலை களை தனியாருக்கு தாரை வார்க்கும் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் அரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு நிர்வாகி சரண்ராஜ் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்