விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
- கடந்த 2021- 22-ம் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய 393 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
- சென்னை கலைவாணர் அரங்கில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, வெள்ளி பதக்கம், ரூ.10 ஆயிரம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கல்வி மாவட்ட அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 6 ஆசிரியர்கள் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆகியோரால் கவுரவிக்கப்பட்டனர்.
தமிழக அளவில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தில் அனைத்து நிலையிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2021 - 2022ம் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய 393 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த 5-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, வெள்ளிப் பதக்கம், ரூ.10 ஆயிரம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இதையடுத்து நடைபெற்ற உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தில், மன்னார்குடி கல்வி மாவட்ட அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோட்டூர் ஒன்றியம், ஆலாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன், பாலையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் ராசகணேசன், நீடாமங்கலம் ஒன்றியம், புள்ளவராயன் குடிகாடு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள், காளாச்சேரி அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆனந்த், கற்பகநாதபுரம் அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் அருளானந்தம் மற்றும் திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சக்கரபாணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
இதில் டாக்டர் ராதாகிரு ஷ்ணன் விருது பெற்ற கோட்டூர் ஒன்றியம் ஆலாத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் முதன்மைக் கல்விஅலுவலர் தியாகராஜன், மாவட்டக் கல்வி அலுவலர் மணிவ ண்ணன் ஆகியோர் முன்னிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவினரிடம் தான் பெற்ற விருது தொகையான ரூ.10 ஆயிரத்தை பள்ளி வளர்ச்சி நிதிக்காக ஒப்படைத்தார்.
ஏற்பாட்டினை தலைமை ஆசிரியை வசந்தி, பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்கபாபு ஆகியோர் செய்திருந்தனர்.