திருச்செந்தூர் காஞ்சி சங்கரா மெட்ரிக் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா
- ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் வி.ஆர்.முத்து கலந்து கொண்டு மாணவி நேத்ராவிற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி வாழ்த்தி பேசினார்.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி பொன் சவுந்தர்யாவுக்கு பரிசு கோப்பைகள் வழங்கினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் காஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நேத்ரா கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் நடந்த பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்தார்.
அந்த மாணவிக்கு கோல்டன் திருச்செந்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி வளாகத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு ரோட்டரி சங்க திருச்செந்தூர் தலைவர் ராமகிருஷ்ணன் என்ற கண்ணன் தலைமை தாங்கினார்.
திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, பள்ளி முதன்மை முதல்வர் செல்வவைஷ்ணவி, ரோட்டரி சங்க துணை ஆளுநர் கண்ணன், செயலாளர் மந்திரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் வி.ஆர்.முத்து கலந்து கொண்டு மாணவி நேத்ராவிற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி வாழ்த்தி பேசினார். தொடர்ந்து பள்ளி தாளாளர் டாக்டர் ஏ.ராமமூர்த்தி மாணவி நேத்ராவுக்கும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி பொன் சவுந்தர்யாவுக்கம் பரிசு கோப்பைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஜீனத், ரோட்டரி சங்க பொருளாளர் சதீஷ்குமார், கிளப் சேர்மன் செல்வின், முன்னாள் செயலாளர் ஆறுமுகம், வருங்கால தலைவர் இளையராஜா உள்ளிட்ட ரோட்டரி சங்கத்தினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் செந்தில்குமார் நன்றி கூறினார்.