கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
- பள்ளிகளில் கராத்தே பயிற்சி நடந்தது.
- அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
கோத்தகிரி,
தமிழக விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதனை முன்னிட்டு கோத்தகிரி உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில் நீலகிரி மாவட்ட சோரின்ட்ரியூ கராத்தே பள்ளி, தூரிகை அறக்கட்டளை, கருவி அறக்கட்டளை மற்றும் மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை இனைந்து கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளில் கராத்தே பயிற்சி நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் நடந்தது. விழாவுக்கு நீலகிரி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் மணிகண்டராஜ் தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சரவணக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தாத்தையன், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, மாவட்ட துணை தலைவர் சுரேஷ், சரத்பாபு, கவுதம், வெங்கடேஷ், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.