உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டத்திற்கு 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் ரமணசரஸ்வதி தகவல்

Published On 2022-07-21 09:52 GMT   |   Update On 2022-07-21 09:52 GMT
  • மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை அன்று விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது
  • அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது

அரியலூர்:

மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை அன்று அரசு விழாவாக கொண்டாடப்படுவதால், அரியலூர் மாவட்டத்துக்கு ஜூலை 26 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ரமணசரஸ்வதி தெரிவி–த்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை உலக பிரதான பாரம்பரிய சின்னமாக யுனோஸ்கோ அறிவித்து, அதனை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆலயத்தை கட்டிய மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை அன்று விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிகழாண்டு இவ்விழாவை தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலமாக அரசு விழாவாக நடத்த தமிழக அரசு அரசாரணை வெளியிட்டது.

அதன்படி வரும் 26 ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் ராசேந்திரன் சோழன் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதால்,

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இருப்பினும் இந்த உள்ளுர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளித்தேர்வுகள் உட்பட) பொருந்தாது. அவை ஏற்கனவேஅரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடை பெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, 06.08.2022 (சனிக்கிழமை) அன்று முழுவேலை நாளாக ஆணையிடப்பட்டுள்ளது.

விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News