மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்
- அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது
- அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாரந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 437 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருவருக்கு காது கருவி, 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் ஆகியவற்றை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார். அதனைத்தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் கோரோட் அறக்கட்டளை மூலம் திருநங்கைகள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் உளவியல் மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி பெற்றுள்ள 19 திருநங்கையருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பவானி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.