உள்ளூர் செய்திகள்

அரியலூர் பகுதியில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் - நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்

Published On 2023-11-10 06:20 GMT   |   Update On 2023-11-10 06:20 GMT
  • அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சாந்தி கலைவா ணன் தலைமையில் நடை பெற்றது.
  • பொதுமக்களுக்கு இடையூராக சுற்றிதிரியும் கால்நடைகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அரியலூர்

அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சாந்தி கலைவா ணன் தலைமையில் நடை பெற்றது.

நகராட்சி ஆணையர் (பொறுப்பு), நகராட்சி பொறியாளர்விஜய்கார்த்திக், நகர்மன்ற துணைதலைவர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேசுமேரி, செல்வராணி, சத்தியன்,கண்ணன்,ரேவதி, மகாலெட்சுமி, இன்பவள்ளி,முகமது இஸ்மாயில், மலர்கொடி,வெங்கடாஜலபதி,ஜெயந்தி,ராணி,ராஜேஸ்,தீபா, புகழேந்தி, சுகாதார ஆய்வாளர் தர்மராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன்,நகராட்சி மேற்பார்வையாளர் காசிநாதன், இளநிலை உதவியாளர் நல்லதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் சரிவர குப்பைகள் அள்ளுவதில்லை. சாக்கடை நீர் தேங்கி நிற்கின்றது. கொள்ளிடம் கூட்டுகுடி நீர் சரிவர விநியோகிப்பதில்லை. பாதாள சாக்கடை திட்டத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூராக சுற்றிதிரியும் கால்நடைகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதற்கு ஆணையர் விஜய கார்த்திக் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகராட்சி பகுதியில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க உடனடியாக நட டிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News