உள்ளூர் செய்திகள்

அரியலூரில் புத்தக கண்காட்சி

Published On 2023-11-15 06:51 GMT   |   Update On 2023-11-15 06:51 GMT
  • 56-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு அரியலூரில் புத்தக கண்காட்சி
  • ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்

அரியலூர்,

56-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில், பொது நூலக இயக்கம், மாவட்ட நுலக ஆணைக் குழு, வாசகர் வட்டம் மற்றும் தமிழ்களம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த புத்தகக் கண்காட் சியை அரியலூர் கோட்டாட் சியர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசி னார்.

அப்போது அவர் பேசியதாவது:-புத்தகங்களைத் தேடி நூலகத்துக்குச் சென்றவர் கள் இன்று மிகப் பெரிய தலைவர்களாகவும், அரசு உயர் அதிகாரிகளாகவும் உள்ளனர்.ஆனால் இன்றைய தலை முறையினர் வாசிப்பு பழக் கத்தை மறந்து, கைப்பேசி, காட்சி ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் தங்களின் அறிவு மட்டுமல்லாமல் மனநிலையும் கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம் உண்டு .எனவே மாணவர்களும் இளைஞர்களும் நல்ல நூல்களை வாசித்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் தாங்கள் அடைய விரும்பும் லட்சியங்களை எளிதில் அடையலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்டட நூலக அலுவலர் ஆண்டாள் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்க்கரசி முன்னிலை வகித்தார். அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் தமிழினி ராமகிருஷ்ணன், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, தமிழ்களம் இளவரசன், உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில துணைச் செயலர் சௌந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.முன்னதாக முதல்நிலை நூலகர் க.ஸன்பாஷா வரவேற்றார். முடிவில் நூலக உதவியாளர் மலர்மன்னன் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News