தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு - பா.ம.க. கோரிக்கை
- தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அரியலூர் பாமக வலியுறுத்தி உள்ளது
- அரியலூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
அரியலூர்,
அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமையில் நடைபெற்றது.மாநில வன்னியர்சங்க செயலாளர் வைத்தி, மாவட்ட தலைவர் அசோகன், மாவட்ட வன்னியர்சங்க செயலாளர் தர்மபிரகாஷ், பெரம்பலூர்மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராமதாஸ், மாவட்ட பொருளாளர் வெற்றிச்செல்வி, மகளிர் அணி துணை செயலாளர் செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை, மாணவர் அணி சங்கசெயலாளர் ஆளவந்தான், மாநிலபொதுக்குழு உறுப்பினர் ரவிசங்கர், ஒன்றிய செயலாளர் செம்மலை, நகரசெயலாளர் விஜய் உட்பட அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரியலூர் அரசு மரு த்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள் மற்றும் போதிய உயர்சிகிச்சை உபகரணங்கள் மற்றும் உபகரண கையாளுனர்களை உடனடியாக நியமனம் செய்திட வேண்டும். மாவட்டத்தில் இயங்கிவரும் சிமெண்ட் ஆலைக்கு அதிக பாரங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமப்புற பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை உடனடியாக மூட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை அரியலூர் மாவட்டத்தில் முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்களவைத் தேர்தலுக்காக பாமக மற்றும் அதன் துணை அமைப்புகள் கிராமம் கிராமமாகச் சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபடுவது.வாக்குச் சாவடி முகவர்கள், கிளை நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது மற்றும்சுண்ணாம்பு சுரங்கள் முறைகேடாக அதிக ஆழத்திற்கு வெட்ட படுவதைக் கண்டித்தும், சுரங்கங்களில் வெடி வைத்து தகர்த்து சுண்ணாம்பு பாறைகள் வெட்டப்படுவதைக் கண்டித்து, பாமக-வன்னியர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.