உள்ளூர் செய்திகள்

அரியலூர் புத்தகத் திருவிழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்

Published On 2023-05-02 06:23 GMT   |   Update On 2023-05-02 06:23 GMT
  • அரியலூர் புத்தகத் திருவிழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன
  • மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்

அரியலூர்:

அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் 7-ம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பாட்டு மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாலை பரிசுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பாட்டுப் போட்டியில் வெற்றிப் பெற்ற அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் அமலனுக்கு முதல் பரிசும், அதே பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் கோகுலுக்கு 2-ம் பரிசும், செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு மாணவி கமலிக்கு 3 ஆம் பரிசும் வழங்கினார்.

அதே போல் நடனப் போட்டியில் அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவி அகிலாவுக்கு முதல் பரிசும், நடனப் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீபுரந்தானைச் சேர்ந்த சிவரஞ்சனிக்கு முதல் பரிசும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் சண்முகவடிவேலு தீதும் நன்றும் எனும் தலைப்பிலும், மோகனசுந்தரம் சிரிக்க சிந்திக்க எனும் தலைப்பிலும் பேசினர்.

Tags:    

Similar News