உள்ளூர் செய்திகள்

எருத்துக்காரன்பட்டி கருப்பையா கோயில் கும்பாபிஷேகம்

Published On 2023-08-31 05:26 GMT   |   Update On 2023-08-31 05:26 GMT
  • அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி கருப்பையா கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
  • கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டார கிராமத்தில் திராளக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

அரியலூர்,

அரியலூர் அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறவழிச்சாலை பாலம் அருகேயுள்ள ஸ்ரீகருப்பையா கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 28 ஆம் தேதி பக்தர்கள் புனித நீர் எடுத்துவரப்பட்டு,அன்று மாலை யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால பூஜை நடத்தப்பட்டு புதன்கிழமை காலை 9.10 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 9.30 மணியளவில் கோயில் கலசத்துக்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து கோயில் வளாகத்திலுள்ள விநாயகர், இடையர் கருப்பு, மருதையன், சின்னையா, ஒண்டி புலிகருப்பு, நல்லமுத்தாயி, பொம்மியாயி, வண்டு தின்னாயி, பாப்பாத்தி அம்மாள், ஓம் சக்தி, பச்சையம்மாள், குதிரை தோரணவாயில் ராகு, கேது ஆகிய தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டார கிராமத்தில் திராளக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News