உள்ளூர் செய்திகள் (District)

சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.

Published On 2022-12-11 06:41 GMT   |   Update On 2022-12-11 06:41 GMT
  • சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  • துணை தோட்டக்கலை அலுவலரை தொடர்பு ெகாள்ளலாம்

அரியலூர்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் அரியலூர் மாவட்டத்தில் மத்திய-மாநில அரசுகளின் மானியத்துடன் ரபி பருவத்தில் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் நடப்பு ரபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். மேலும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் பாதிப்புகளில் இருந்து வாழ்வாதாரத்தினையும், பொருளாதார இழப்பினையும் பாதுகாக்க பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறலாம். பயிர் காப்பீடு செய்வதற்கு ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. தகவல்களுடன் கூடிய புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா நகல், நடப்பு பயிர் சாகுபடி அடங்கல், முன் மொழிவுப் படிவம் ஆகியவற்றை கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு கட்டணம் செலுத்தலாம். தனியார் நிறுவனத்தில் பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.885 செலுத்திட கடைசி நாள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் துணை தோட்டக்கலை அலுவலரை 9943841155 என்ற செல்போன் எண்ணிலும், திருமானூர் தோட்டக்கலை அலுவலரை 8760531338 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

Tags:    

Similar News