மக்காச்சோள படைப்புழு தாக்குதலை தடுப்பது எப்படி?கலெக்டர் விளக்கம்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் 21 ஆயிரம் ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளம் இளம்செடி, பூ மற்றும் கதிர் பிடிக்கும் பருவமென பல்வேறு நிலைகளில் உள்ளது. 25 முதல் 35 நாட்கள் உள்ள இளம்செடியில் படைப்புழு வின் தாக்குதல் தென்படுகி றது. படைப்புழுக்களின் நடமாட்டத்தை கண்டறிய ஏக்கருக்கு 5 எண் இனக்க வர்ச்சி பொறி வைத்து, படைப்புழுக்களின் தாக்குத லுக்கு ஏற்ப பூச்சிக்கொல்லி தெளிக்கலாம்.
முதல் பூச்சிக்கொல்லி தெளிப்பாக விதைத்த 15 முதல் 25 நாளில் அசாடி ரக்டின் 1 சதவீதம், இசி 20 மில்லி அல்லது தயோடிகார்ப் 20 கிராம்அல்லது இமா மெக்டின் பென்சோயேட் 4 கிராம், 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இரண்டாம் கட்ட தெளிப்பாக, விதைத்த 31 முதல் 45 -வது நாளில் ஸ்பைனிடோரம் 11.7 சதவீதம் எஸ்இ 5 மில்லி அல்லது மெட்டாரைசியம் - 80 கிராம் அல்லது குளோரன் டிரானிலிபுரோல் - 4 மில்லி அல்லது புளுபென்டமைட் - 4 மில்லி அல்லது நோவாலூரான் 15 மில்லி இவற்றில் ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து குருத்துப் பகுதியில் உள் செல்லுமாறு தெளிக்க வேண்டும்.
அரை ஏக்கருக்கும் குறைவாக மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மேற்கண்ட பூச்சிக்கொல்லி யினை 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் கலவையை நிரப்பி மூடியின் மேல் பகுதியில் துளையிட்டு குருத்தில் உள் செல்லுமாறு தெளிக்க வேண்டும். மக்காச்சோளம் பயிர் கதிர் பிடிக்கும் பருவத்தில் இருப்பின் டிரோன் மூலமாக மருந்தினை விரைவாக தெளிக்கலாம்
மேற்கண்ட தொழில்நு ட்பங்களை பயன்படுத்தி படைப்புழுவின் தாக்குதலை வெகுவாக குறைத்து, மகசூல் இழப்பு ஏற்படா வண்ணம் தடுத்து எதிர்பார்க்கும் விளைச்சலை பெறலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.