உள்ளூர் செய்திகள் (District)

அனைவரும் பங்கேற்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி மனு

Published On 2022-12-20 09:13 GMT   |   Update On 2022-12-20 09:13 GMT
  • அனைவரும் பங்கேற்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி மனு அளித்தனர்
  • அரியலூர் கோக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், கோக்குடியில் அந்தோனியார் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்குமாறு கலெக்டர் ரமணசரஸ்வதியிடம் கிராம நாட்டாமைகள் செல்வராஜ், சவரிராஜ் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ஆண்டு தோறும் தைமாதம் 5-ந் தேதி அந்தோனியார் பொங்கலை முன்னிட்டு அரியலூர் கோக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெறும். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் காரணமாகவும், 2022 ஆண்டு முதல் மாடு யார் விடுவது என்பது காரணமாகவும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. தற்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக எங்களுக்குள் பிரிவிவாக பிரிந்திருக்கிறோம். கடந்த 5 தேதி அன்று ஒரு பிரிவினர் தாங்கள் தான் கோக்குடி என்று சொல்லி ஜல்லிக்கட்டு நடத்த மனு அளித்துள்ளார்கள். ஜல்லிக்கட்டு விழா ஒரு பிரிவினருக்கோ அல்லது இயக்கங்களுக்கோ வகையராகவுக்கோ கோக்குடி ஜல்லிக்கட்டு சொந்தமில்லை. எனவே அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் முதல் மாடு அல்லது பொது மாடு விட்டு ஜல்லிக்கட்டு நடத்த ஆவனம் செய்ய வேண்டும் அல்லது மனுவில் அளித்துள்ள விதிமுறைகளின் படி ஜல்லிக்கட்டு நடந்தால் நன்றாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News