உள்ளூர் செய்திகள் (District)

பனையடி கிராம கோவில்களில் கும்பாபிஷேகம்

Published On 2023-02-13 09:21 GMT   |   Update On 2023-02-13 09:21 GMT
  • பனையடி கிராம கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
  • கர்ப்ப கிரகத்தில் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடைபெற்றது
அரியலூர்:


அரியலூர் அடுத்த பனையடி கிராமத்திலுள்ள விநாயகர், சப்தகன்னிகள் மற்றும் கருப்புசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த விநாயகர், சப்தகன்னிகள், கருப்பு சாமி கோவில்கள் பொதுமக்கள் சார்பில் புனரமைக்கப்பட்டது. மேலும் சாமிசிலைகள் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, மேளதாளம், வாணவேடிக்கையுடன், கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கர்ப்ப கிரகத்தில் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும்நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




Tags:    

Similar News