உள்ளூர் செய்திகள்

எல்.ஐ.சி வீட்டுக் கடன் நிறுவனம் வாடிக்ைகயாளருக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

Published On 2023-08-18 05:38 GMT   |   Update On 2023-08-18 05:38 GMT
  • பொய்யான தகவல்களைக் கூறி வாடிக்கையாளரை ஏமாற்றிய எல்.ஐ.சி வீட்டுக் கடன் நிறுவனம் ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவு
  • காப்பீடு கட்டாயம் என்று கூறி அவரிடமிருந்து ரூ.63,911 யை பெற்றுக்கொண்டு காப்பீடு வழங்கியுள்ளது

அரியலூர் 

அரியலூர் அருகே பொய்யான தகவல்களைக் கூறி வாடிக்கையாளரை ஏமாற்றிய எல்.ஐ.சி வீட்டுக் கடன் நிறுவனம் ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

ஆண்டிமடம் அருகேயுள்ள அணிக்கு றிச்சான் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுதாகர் மனைவி ராசாத்தி(வயது33). கடந்த ஆண்டு நம்பர் மாதம் திருச்சியிலுள்ள எல்.ஐ.சி. வீட்டுக் கடன் நிறுவனத்தை அணுகி ரூ.8 லட்சம் வீட்டுக் கடன் கேட்டு விண்ண ப்பித்திருந்தார். அதற்கு அந்த நிறுவனம், கடன் பெற வேண்டும் என்றால் காப்பீடு கட்டாயம் என்று கூறி அவரிடமிருந்து ரூ.63,911 யை பெற்றுக்கொண்டு காப்பீடு வழங்கியுள்ளது.

மேலும் இந்நிறுவனம், ராசாத்திக்கு ரூ.8 லட்சம் கடன் கொடுத்தது போல், அவரது பெயரில் உள்ள வீட்டுப் பத்திரத்தை தங்களது பெயரில் அடமானம் பதிவுக் செய்துக் கொண்டது.

ஆனால் ஒப்பந்தப்படி அந்நிறுவனம், வீட்டுக் கடனை வழங்காமல் இருந்து வந்தது. இது குறித்து ராசாத்தி அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தார். இதனை விசாரித்து வந்த ஆணையத் தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் கொண்ட குழுவினர்,

பொய்யான தகவல்களைக் கூறி ஏமாற்ற நினைத்த எல்.ஐ.சி வீட்டுக் கடன் நிறுவனம், ராசாத்திக்கு ரூ.2 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்றும், பதிவு செய்த அடமானத்தை நிறுவனத்தின் செலவிலேயே ரத்து செய்து அசல் பத்திரத்தைத் திருப்பித்தரவும், பத்திரப் பதிவு கட்டணம் ரூ.10,210 மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.63,911 ஐ வட்டியுடன் ஒரு மாதத்துக்கு தர வேண்டுமெனவும், வழக்கு செலவுக்காக ரூ.10,000 வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தனர்.

Tags:    

Similar News