சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்த கூடாது – மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்
- அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அ ரங்கத்தில் மாவட்ட ஊ ராட்சி குழு கூட்டம் நடைபெற்றது.
- எனவே,நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்
அரியலூர்
அரியலூர்பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அ ரங்கத்தில் மாவட்ட ஊ ராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர் தலை மையில் நடைபெற்றது.
துணைதலைவர் அசோகன்,செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் அம்பி கா,ராமச்சந்திரன், நல்ல முத்து, குலக்கொ டி,வசந்த மணி,சகிலாதேவி, ராஜேந்திரன்,அன்பழகன், தனசெல்வி,கீதா, புள்ளியியல் அலுவலர் பால சுப்பிர மணி யன்,அலுவலக உதவியா ளர்கள் ரமேஷ், ராமராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது:-
புதுப்பாளையம்நெறிஞ்சிக்கோரை,பெரியநா கலூர்,அஸ்தி னாபுரம்,வாலாஜநகரம், தாமரைக்குளம் சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் எடுப்பதற்காக நிலம் கொடுத்தனர்.
ஆனால் இதுவரை நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்கவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொ டுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,விவசாயிகள் கொடுத்துள்ள அந்த நிலத்தில் நவம்பர் மாதம் 28-ந் தேதி சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகம் நடத்தவுள்ளது. எனவே,நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும், விவசாயி களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது.
மீறி நடத்தப்பட்டால் அங்கு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தி்ல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியு றுத்தினர். கோரிக்கைகள் அனைத்து உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதையடுத்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து துறை அலுவலர்கள் தங்களது துறை சார்ந்த திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.