ஆண்டிமடத்தில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
- ஆண்டிமடத்தில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
- கூட்டம் ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டம் ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு துறை சார்ந்த துறை ரீதியான அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. இதனால் பொதுமக்களுடைய அடிப்படை பிரச்சனைகளை சொல்வதற்கு சிரமமாக உள்ளது. ஒன்றிய குழு கூட்டத்திற்கு அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும், மேலும் அங்கன்வாடி அலுவலகம் உடனடியாக கட்டித் தர வேண்டும், நெசவாளர் குடியிருப்பு கட்டிடம் வாடகை இடத்தில் உள்ளது.
அதை உடனடியாக அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய கவுன்சிலர்கள் முன்வைத்து பேசினர். இதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் நீங்கள் கூறிய அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.