உள்ளூர் செய்திகள்

பாதுகாப்பற்ற கரையோரங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் - கலெக்டர் வேண்டுகோள்

Published On 2022-07-19 08:42 GMT   |   Update On 2022-07-19 08:42 GMT
  • பாதுகாப்பற்ற கரையோரங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  • கொள்ளிடத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

அரியலூர்:

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள தைத்தொடர்ந்து, அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு, தற்போது சுமார் 1,32,000 கன அடிக்கு படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும் கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மேலும், பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகளவு வரும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகள் விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள்; பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை நீர்நிலைகளின் அருகே மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும் நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதை தவிர்க்கவும் வேண்டும். பாலங்களைத் தவிர நீர்நிலைகளை கடந்து செல்லும் இதர பாதைகள் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் பொதுமக்கள் செல்ல வேண்டும் எனவும் பொதுமக்களை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News