அரியலூரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
- அரியலூர் வாக்காளர் பட்டியலில் 5.07 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்
- பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்திற்கென சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது
அரியலூர்,
அரியலூர்மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், ஒருங்கிணை ந்த வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 1,27,477 ஆண் வாக்காளர்களும், 1,27,345 பெண் வாக்காளர்களும், 04 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,54,826 வாக்காளர்கள் உள்ளனர்.
ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தொகுதியில் 1,26,057 ஆண் வாக்காளர்களும், 1,26,535 பெண் வாக்காளர்களும், 07 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,52,599 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,07,425 ஆகும்.
மாவட்ட கலெக்டர் ஆனி மேரி சொர்ணா இது குறித்து கூறும்போது:-
18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்க ப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 27.10.2023 முதல் 09.12.2023 வரை படிவங்களை பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடலாம்.
மேலும், சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிக்கான விண்ணப்பிக்க அனைத்து வாக்கு ச்சாவடி மையங்க ளில் 04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.