உள்ளூர் செய்திகள்

மாணவியர் விடுதியில் வாட்டர் ஹீட்டர் பொருத்த கோரிக்கை

Published On 2023-04-11 06:46 GMT   |   Update On 2023-04-11 06:46 GMT
  • அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் வாட்டர் ஹீட்டர் பொருத்த கோரிக்கை
  • கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. அப்போது சமூக ஆர்வலரும், வழக்குரைஞருமான செ.சுகுமார், மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதியிடம் கோரிக்கை மனு அளித்தார். அவர் அளித்த மனுவில், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, விடுதிக்கு வந்து சுடுநீரில் குளிப்பது அல்லது கைகால்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பது வழக்கம். இதற்காக மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் விடுதிகளில் வாட்டர் ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.இதில், அரியலூரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் மட்டும் வாட்டர் ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மாணவியர்கள் விடுதியில் பொருத்தப்படவில்லை. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும், அக்கல்லூரி முதன்மையர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவியர்கள் தெரிவித்தனர். மேலும் அரசு மருத்துவ மனையில் இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு கிசிச்சை அளிப்பதில்லை. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News