உள்ளூர் செய்திகள்

அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

Published On 2023-09-23 07:15 GMT   |   Update On 2023-09-23 07:15 GMT
  • ஜெயங்கொண்டத்தில் ஆவணம் இல்லாமல் அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
  • அபராதம் விதித்து எச்சரிக்கை செய்த போக்குவரத்து போலீசார்

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்ட ம் ஜெயங்கொண்டம் பஸ் ஸ்டாண்ட் ரோடு, நான்கு ரோடு, சிதம்பரம் ரோடு, விருத்தாச்சலம் ரோடு, கும்பகோணம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த இரண்டு சக்கர வாகனங்கள், மூன்று நபர்களை ஏற்றி வந்தவர்கள், தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள், உரிய ஆவணங்கள் இன்றி வந்தவர்கள், வண்டி நம்பர் எழுதாமல் வந்தவர்கள், வண்டி நம்பர் பிளேட்டில் வண்டி நம்பர் சரிவர தெரியாமல் வந்தவர்கள், குடிபோதையில் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் என மொத்தம் 15-க்கும் மேற்பட்ட 2 சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் வாகன விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ரூபாய் 500 முதல் 1500 ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதில் சிக்கிய 18 வண்டிகளுக்கு போலீசார் 500 முதல் 1500 வரை அபராதம் விதித்தனர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த இரண்டு நபர்களுக்கு தலா பத்தாயிரம் வீதம் இரண்டு வண்டிகளுக்கு 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் பெரும்பாலா னவர்கள் இளைஞர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News