உள்ளூர் செய்திகள்
நடப்பாண்டில் 7.57 இலட்சம் நடவுகள் இலக்கு
- அரியலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க திட்டம்
- மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தகவல்
அரியலூர்,
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட, கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா இது குறித்து கூறும்போது, அரியலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் 2023-24-ம் ஆண்டிற்கு 7,57,000 நடவுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரியலூர் வனக்கோட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மூலமாக 4,28,034 (போக்கு செடிகள் உட்பட) மூன்று நாற்றங்கள்களில் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2023-24 ஆண்டு நடவு பணிகள் காப்பு காடுகள், அரசு பொது இடங்கள், தனியார் நிறுவனங்கள் வளாகம், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் வளாகம், தொழிற்சாலைகள் வளாகம், மருத்துவமனை வளாகங்கள், விவசாயிகள் நிலங்கள் போன்ற பல்வேறு இடங்களில் வனத்துறை மூலம் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று அவர் கூறினார்.