உள்ளூர் செய்திகள்

அர்ஜூனன் தபசு ெதருகூத்து நாடகம் நடைபெற்ற காட்சி.

இருமத்தூர் அருகே அர்ஜுனன் தபசு தெருக்கூத்து நாடகம்

Published On 2023-05-04 08:14 GMT   |   Update On 2023-05-04 08:14 GMT
  • மகாபாரத விழாவில் அர்ஜுனன் தபசு என்ற தெருக்கூத்து நாடகம் நேற்று நடைபெற்றது.
  • வரும் 7-ந் தேதி தீமிதி விழாவும், துரியன் படுகளம் தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது.

மொரப்பூர்,

தருமபுரிமாவட்டம், காரிமங்கலம் வட்டம், இருமத்தூர் அருகே உள்ள வையம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தர்மராஜா திரவுபதி அம்மன் மகாபாரத விழா கடந்த ஏப்ரல் மாதம் 19 -ந்தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 7-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

இந்த மகாபாரத விழாவில் அர்ஜுனன் தபசு என்ற தெருக்கூத்து நாடகம் நேற்று நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து நேற்று மஞ்சள் நாட்டில் மாடு மடக்குதல்,இன்று கண்ணன் தோதும் மன்னன் வாழும் நாளை, அரவான் கடவுளையும், நாளை மறுநாள் சனிக்கிழமை கர்ணன் கண்ட கருட வாகன காட்சி ஆகிய நிகழ்ச்சிகளும் விழாவின் இறுதி நாளான 7-ந் தேதி தீமிதி விழாவும் துரியன் படுகளம் தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News