ஆயுதப்படை போலீஸ்காரர் தற்காலிக பணியிடை நீக்கம்போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
- யுவராஜ் (வயது 29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
- இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன். இவரது மகன் யுவராஜ் (வயது 29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அதை தட்டிக் கேட்ட கல்கியின் அண்ணன் யுவராஜ் சர்மா, அதே பகுதியை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 ேபரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்த புகாரின் பேரில் யுவராஜ் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆயுதப்படை போலீசார் யுவராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.