உள்ளூர் செய்திகள்

விஜயமங்கலம் சசூரி கல்லூரியில் கலைப்போட்டிகள்

Published On 2023-02-25 05:22 GMT   |   Update On 2023-02-25 05:22 GMT
  • சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராம்குமார் வரவேற்று பேசினார்.
  • இதில் மாணவர்கள் தங்கள் பன்முக திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

திருப்பூர் :

திருப்பூர் விஜயமங்கலம் சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சசூரி நிறுவனங்கள் மற்றும் அடையாறு புற்றுநோய் நிறுவனம் சார்பில் சிரிஸ்டா-2023 நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முதல் நாளாக பள்ளி மாணவர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சசூரி நிறுவனத்தின் தாளாளர் கந்தசுவாமி தலைமை தாங்கினார். செயலாளர் சவிதா மோகன்ராஜ் விழாவினை துவக்கி வைத்தார். சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராம்குமார் வரவேற்று பேசினார்.

நைருதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அன்பரசு வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) சிவானந்தம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் பல்வேறு பள்ளிகளிலிருந்து 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

குழு நடனம், தனிநபர் நடனம், மௌனப்படம், ரங்கோலி, கழிவுகளிலிருந்து கைவினை பொருட்கள் தயாரித்தல் மெஹந்தி, கையெழுத்து போட்டி, சுவரொட்டி தயாரித்தல், அறிவியல் கண்காட்சி, குறும்படம், வண்ணம் தீட்டுதல், காய்கறிகள் செதுக்குதல், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, புகைப்படம் எடுத்தல், நகக்கலை போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவர்கள் தங்கள் பன்முக திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

Tags:    

Similar News