சசூரி கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கானகலைப்போட்டிகள் - நாளை தொடங்குகிறது
- பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
- கிரேடு முறையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப் பட உள்ளது
திருப்பூர் :
திருப்பூர் சசூரி கல்வி நிறுவனங்கள் மற்றும் அடையார் புற்றுநோய் நிறுவனம் சார்பில் சிரிஸ்டா-2023 விழா நாளை 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. திருப்பூர் விஜயமங்கலம் சசூரி கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
குரூப் டான்ஸ், சோலோ டான்ஸ், மிமீ, மெகந்தி ஆர்ட், நெய்ல் ஆர்ட், ரங்கோலி, வெஜிடபிள், புரூட் கார்விங், கிராப்ட், ஹேண்ட் ரைட்டிங், பெயிண்டிங், போட்டோ கிராபி, போஸ்டர் மேக்கிங், ஸ்பெல் பீ, சயின்ஸ் எக்ஸ்போ, லிட்டில் செப், திருக்குறள், செஸ், யோகா, சிலம்பம், கராத்தே, வாலிபால், கபடி, கிரிக்கெட்,பாஸ்கட் பால், குறும்படம் , பேஸ் பெயிண்டிங் என பல்வேறு விதவிதமான போட்டிகள் நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 6 முதல் 8-ம்வகுப்பு வரை, 9 முதல் 12-ம்வகுப்பு வரை என்ற கிரேடு முறையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.