தாக்கப்பட்ட விவசாயி சாவு: இறந்தவர் உடலுடன் உறவினர்கள் போராட்டம், பதட்டம்-போலீஸ் குவிப்பு
- ஆத்திரம் அடைந்த உக்கிரவேல் தனது மனைவி, மகனுடன் சேர்ந்து ஞானசெல்வத்தை தாக்கினர்.
- பிரச்சினையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் போட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஞானசெல்வம்.(வயது 47). விவசாயி. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உக்கிரவேல் என்பவருக்கும் வீட்டுமனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று இது தொடர்பாக பிரச்சினை வெடித்தது. ஆத்திரம் அடைந்த உக்கிரவேல் தனது மனைவி, மகனுடன் சேர்ந்து ஞானசெல்வத்தை தாக்கினர். படுகாயம் அடைந்த ஞானசெல்வம் பண்ருட்டிஅரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு நிலைமை மோசமாக ஞானசெல்வம் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இவரது உடல் இன்று காலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. ஆத்திரம் அடைந்த ஞானசெல்வத்தின் உறவினர்கள் உடலை உக்கிரவேல் வீட்டுமுன்பு வைத்து போராட்டம் செய்தனர். இந்த பிரச்சினையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் போட்டனர். தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸ இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகோபால் விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அவர்கள் சமரசம் ஆகவில்லை. இதனால் அங்குபதட்டம் நிலவியது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.