ஆவராங்காடு வார சந்தை வளாகத்தில்கடைகள் கட்டுவதற்கு ஆய்வு பணி
- ஆவராங்காடு பகுதியில் வாரந்தோறும் சனி கிழமை சந்தை சுமார் 50 ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது.
- சாலையில் இருபுறத்திலும் நடைபாதையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கிறார்கள். தற்போது வார சந்தை வளாகத்தில் சுமார் 100 கடைகள், 1.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அடுத்த ஆவராங்காடு பகுதியில் வாரந்தோறும் சனி கிழமை சந்தை சுமார் 50 ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது.
இந்த சந்தையில் காய்கறி, பழம், வெங்காயம், பழம்,செருப்பு, துணிகள், பாய், கட்டில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவராங்காடு சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் விளை பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
சுற்றுவட்டாரத்தை ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்வர்கள். சந்தைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து விட்டது.
இதனால் சாலையில் இருபுறத்திலும் நடைபாதையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கிறார்கள். தற்போது வார சந்தை வளாகத்தில் சுமார் 100 கடைகள், 1.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.
நேற்று கடைகள் அமையுள்ள இடத்தை நகராட்சி சேர்மன் செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது துணை சேர்மன் பாலமுருகன், மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.