காரைக்கால் துறைமுகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு கரைதட்டி சேதம்
- 350 விசைப்படகுகளை கரையோற த்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
- 3 விசைப்படகுகள் மூலம் சேதமடைந்த படகை மீட்டனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் காரைக்கால்மேடு, கிளி ஞ்சல்மேடு, மண்டபத்தூர், கோட்டு ச்சேரிமேடு, கீழகாசாக்குடி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த சுமார் 350 விசைப்படகுகளை கரையோற த்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். துறைமுகத்தில் போதுமான இட வசதி இல்லாத காரணத்தால், சிலர் தங்கள் படகுகளை, அருகில் உள்ள அரசலாற்றில் பாதுகாப்பாக கட்டி வைத்திருந்தனர்.
இதே போல் கீழகாசாக்குடி மேடு கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு துறை முகத்தை ஒட்டிய அரசலாற்றில் கட்டிவை த்திருந்தார். அமாவா சை யையொட்டி, கடல் சீற்றத்துடன் காண ப்பட்டதால், கடல் நீர் ஆறு வழியாக வேகமாக பாய்ந்ததால், ஆற்றில் கட்டிவைத்திருந்த விசைப்படகு, நீரில் சுமார் 500 மீட்டர் இழுத்துச்செல்லப்பட்டு, துறைமுகம் முகத்துவார பாராங்கல்லில் மோதி, கடற்கரையில் சேதமாகி தரை தட்டி நின்றது. விபரம் அறிந்த மீனவர்கள் 3 விசைப்படகுகள் மூலம் சேதமடைந்த படகை மீட்டனர்.