உள்ளூர் செய்திகள்

பஸ் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு வாகனங்கள். பல்லடம் பஸ் நிலையத்தில் போதையில் படுத்து கிடக்கும் நபர்கள்.

 

பல்லடம் பஸ் நிலையத்தில் சரக்கு வாகனங்கள்- போதை ஆசாமிகளால் பயணிகள் பாதிப்பு

Published On 2022-06-21 08:37 GMT   |   Update On 2022-06-21 08:37 GMT
  • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
  • குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர்.

பல்லடம் :

பல்லடம் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது.விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை,போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில்,கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே போலீசார் பஸ் நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லடம் பஸ் நிலையத்தில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஓட்டுநர்கள் கூறியதாவது:-பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள், ஆகிய 3 நாட்கள் அதிகளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும், இந்த நிலையில் திங்கட்கிழமையில் பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News