உள்ளூர் செய்திகள்

 விழுப்புரம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் மகிளா சம்மன் சேமிப்பு பத்திர திட்டத்தை, அஞ்சலக அலுவலர் கம்சு தொடங்கி வைத்தார் .

தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மகிளா சம்மன் சேமிப்பு பத்திர திட்ட தொடக்க விழா

Published On 2023-04-05 05:11 GMT   |   Update On 2023-04-05 08:58 GMT
  • விழுப்புரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில், மகிளா சம்மன் சேமிப்பு பத்திர திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது
  • . இத்திட்டத்தை தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி தொடங்கி வைத்தார்.

 விழுப்புரம்:

விழுப்புரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில், மகிளா சம்மன் சேமிப்பு பத்திர திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டத்தை தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி கம்சு தொடங்கி வைத்தார். முன்னதாக அனைவரையும் மக்கள் தொடர்பு ஆய்வாளர் தங்க ராஜ் வரவேற்றார். தலைமை அஞ்சலக உதவி அதிகாரிகள் சாதிக்பாஷா , ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மத்திய அரசு அறிவித் துள்ள பிரத்யேக சிறு சேமிப்பு திட்டத்திற்கு, 'மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் மகளிர் அல்லது சிறுமிகள் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம். மகிளா சேமிப்பு திட்டத்தின் கீழ் மகளிர் அல்லது சிறுமிகள் பெயரில் மட்டுமே சிறுசேமிப்பு கணக்குகள் தொடங்க முடியும். மேலும்தொடர்ந்து, 2025-ம் ஆண்டு வரும் வரை, இந்த திட்டம் செயல்படுத்தப்படும். சேமிப்பு பணத்தில் பகுதியளவு தேவைக்கு எடுக்கும் வசதியும் உள்ளது. நிகழ்ச்சியில் முதலீட்டாளர்கள் அமுதா, பிரியா விழுப்புரம் மாவட்ட சிறப்பு சிறுசேமிப்பு முகவர் மதுரை வீரன் மற்றும் அஞ்சலக வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News