உள்ளூர் செய்திகள்

மயிலம் அருகே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

Published On 2023-01-31 07:50 GMT   |   Update On 2023-01-31 07:50 GMT
  • தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
  • பெற்றோரிடம் பேசி 10-ந் தேதி நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கம்பந்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் பங்காரு அவரது மகன் லட்சுமி நாராயணன்(வயது27).  இவருக்கும் மயிலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும்,வருகிற 10 -ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

இதுகுறித்து சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சமூக நலத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சமூக நல ஆலோசகர் ஸ்ரீதேவி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா , வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் பிருந்தாதேவி உள்ளிட்டோர் சிறுமியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது பெற்றோரிடம் பேசி 10-ந் தேதி நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினார். மேலும் பெண்ணின் பெற்றோருக்கு அறிவுரைகள் வழங்கி, சிறுமியை மீட்டு விழுப்புரம் குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News