திண்டிவனம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஆட்டோ டிரைவர் தற்கொலை: போலீஸ் விசாரணை
- ரவி என்பவர் எனது சாவுக்கு காரணம் என்று எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது.
- ரவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் அவரப் பாக்கம் பகுதியைச் சேர்ந்த வர் நந்தகுமார். இவர் செஞ்சி ரோட்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் திண்டிவனம் பொலகுப்பம் அருகே காலி மனை அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ரோசனை போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு திண்டி வனம் அரசு பொது மருத்து வமனைக்கு பிேரத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த போலீஸ் விசாரணை செய்தனர். விசாரணையில் நந்த குமார் சட்டை பையில் ஒரு துண்டு சீட்டில் திண்டிவனம் முருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கேண்டீன் ரவி என்பவர் எனது சாவுக்கு காரணம் என்று எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது.
அவர் பாக்கெட்டில் இருந்த சீட்டை வைத்து கேண்டீன் ரவியை போலீ சார் விசாரணை செய்தனர். விசாரணையில் கேண்டீன் ரவிக்கும் நந்தகுமாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்த தாக கூறப்படுகிறது. இதனால் ரவி நந்த குமாருக்கு தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.இதனால் விரத்தி அடைந்த நந்தகுமார் தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை யடுத்து கேண்டீன் ரவிக்கு திடீரென உடல்நிலை சரி யில்லாததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதித்து உள்ளனர்.