உள்ளூர் செய்திகள்

வடவள்ளி அருகே விபத்தில் ஆட்டோ உரிமையாளர் பலி

Published On 2023-02-10 09:30 GMT   |   Update On 2023-02-10 09:30 GMT
  • மனைவி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடவள்ளி,

கோவை வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலை பாலாஜி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது55).இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஒட்டி வருகிறார். இவரது மனைவி சந்திரா(50).இவர்களுக்கு என்ற மனைவியும், நந்தினி என்ற மகளும், ராஜ்குமார் என்ற மகனும் உள்ளனர்.நேற்று மாலை சந்திராவும், பொன்னுசாமியும் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க ஆட்டோவில் சென்றனர். பின்னர் அங்கிருந்து 2 பேரும், ஆட்டோவில் வீட்டிற்கு வந்தனர்.

ஆட்டோ தொண்டா–முத்தூர் சாலையில் உள்ள யாவி அடுக்குமாடி குடியிருப்பு பகுதி அருகே வந்தது. அப்போது எதிரே தொண்டாமுத்தூரில் இருந்து, கவுண்ட–ம்பாளையம் நோக்கி காய்கறி ஏற்றி கொண்டு மினி லாரி வந்தது.

எதிர்பாராத விதமாக அதிவேகமாக வந்த மினிலாரி, பொன்னுசாமியின் ஆட்டோமீது பயங்கரமாக மோதியது. இதில் கணவன், மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.இதில் பொன்னுசாமி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். அவரது மனைவி சந்திரா மிகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பொன்னுசாமி மகள் நந்தினி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த பொங்கல் திருவிழா அன்று இவரது மகன் ராஜ்குமார் விபத்தில் உயிரிழந்தார். அதன் சோகம் முடிவதற்குள் தந்தையும் உயிரிழந்ததும் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே வடவள்ளி பிரிவில் இருந்து தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் அதி வேகமாக சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே இந்த சாலையில் தடுப்புகள் அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News