ஏ.வி.பி. பள்ளி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
- மாணவர்கள் சைக்கிளில் பேரணியாகச்சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- ஆசிரியர்கள் வரவேற்று மாணவர்களின் செயல்களை பாராட்டி மகிழ்ந்தனர்.
திருப்பூர்,
திருப்பூர், காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் மாணவர்கள் வலிமையான பாரதத்தை உருவாக்குவோம் என்ற கருத்தினை வலியுறுத்தியும் , உடல் நலத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் பள்ளியில் செயல்படும் உடல்நல ஆரோக்கிய மன்றத்தினைச் சேர்ந்த சுமார் 50-க்கும் அதிகமான மாணவர்கள் சைக்கிளில் பேரணியாகச்சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி வழிகாட்டுதலின் படி தொடங்கிய இச்சைக்கிள் பேரணியைப் பள்ளியின் முதல்வர் பிரமோதினி, பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.
பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நடந்த இப்பேரணி காந்திநகர், அங்கேரிபாளையம், ஜே.எஸ். கார்டன்,அனுப்பர்பாளையம் ஆகிய இடங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இறுதியாக பள்ளி வந்தடைந்த பேரணி குழுவினரை பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று மாணவர்களின் செயல்களை பாராட்டி மகிழ்ந்தனர்.