உள்ளூர் செய்திகள் (District)

விருதினை, கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவனிடம் இருந்து தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் அந்தோணி பட்டுராஜன் பெற்றுக்கொண்ட காட்சி.

தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு விருது

Published On 2022-11-16 08:56 GMT   |   Update On 2022-11-16 08:56 GMT
  • கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
  • தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 69-வது கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் சிவமுத்துக்குமாரசாமி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான சிவகாமி, மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகள் மற்றும் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கப்பிரிவில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவரும் தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

விருதினை, கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவனிடம் இருந்து தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் அந்தோணிபட்டுராஜன் பெற்றுக்கொண்டார்.

இதில், தூத்துக்குடி சப்-கலெக்டர் கவுரவ்குமார், துணைப்பதிவாளர் சுப்புராஜ் மற்றும் கூட்டுவுத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News